ஸ்ரீராமகிருஷ்ணர் - விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02டிச 2011 11:12
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் ஸ்ரீராமகிருஷ்ணர்- சுவாமி விவேகானந்தர் பக்தர்களில் 19 வது மாநாடு இன்று துவங்கி டிச. 4 வரை நடக்கவுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடங்கள், ஸ்ரீசாரதா மடங்களை சேர்ந்த சன்னியாசிகள், அறிஞர் சொற்பொழிவு , கருத்தரங்கங்கம் நடக்கவுள்ளது. மாநாட்டின் கொடியினை சென்னை ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த சுவாமி சோமானந்த ஜி மகராஜ் ஏற்றுகிறார். கோல்கட்டா ராமகிருஷ்ண மடத்தின் துணை தலைவர் சுவாமி ஸ்மரானந்தஜி மகராஜ் திருவிளக்கேற்றுகிறார். மாநாட்டு தலைவர் டி.ஆர். தினகரன் வரவேற்கிறார். மாநாட்டின் நோக்கம் குறித்து சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ் பேசுகிறார். காஞ்சிபுரம் மடத்தலைவர் சுவாமி தர்மாத்மானந்தஜி மகராஜ், கோவை ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா சுவாமி ஹரிவ்ரதானந்தஜி, நீதியரசன் என்.ராமசுப்பிரமணியன், நாகை முகுந்தன் உட்பட பலர் பேசுகின்றனர். செயலர் பா.கோடீஸ்வரன் நன்றி கூறுகிறார்.