திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் முன்னாள் முதல்வர் தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02டிச 2011 11:12
காரைக்கால் : திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில், அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் தரிசனம் செய்தார். அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் ஜர்பூம் ஜாம்லின் நேற்று காரைக்கால் வந்தார். மாலை 4 மணிக்கு திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலுக்குச் சென்று, சொர்ண கணபதி, சுப்ரமணியர், தர்பாரண்யேஸ்வரர், பிரணாம்பிகை அம்பாளை வழிபட்டு, சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டார். மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.