கூடலுார், கூடலுாரில் யாதவ மகாசபை சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கூடலழகிய பெருமாள் கோயிலில் இருந்து கிருஷ்ணன் ரத ஊர்வலம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முக்கிய வீதிகள் வழியாக வந்த ரத ஊர்வலம் கூடலழகிய பெருமாள் கோயிலில் முடிந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.