தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் பைரவருக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2017 01:09
திண்டுக்கல், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமிக்கும் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. நேற்று சுவாமிக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாரதனை மற்றும் ஆறு கால பூஜைகள் நடந்தது. அதில் கிருஷ்ண சைதன்ய தாஸ், ராம நாமத்தை தினமும் சொல்லி வருவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து, சொற்பொழிவு நிகழ்த்தினார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.