ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் 2 ஆம் நாள் புஷ்கரம் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2017 01:09
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில், நேற்று இரண்டாம் நாள் புஷ்கரம் விழா கொண்டாடப்பட்டது. வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் நீராடினர். அம்மா மண்டபம் சாலையில், காவிரி புஷ்கர பிரம்ம யக்ஞ கமிட்டி சார்பில், வேத விற்பன்னர்களை கொண்டு மழை வேண்டியும், காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடவும், 23ம் தேதி வரை பல்வேறு யாகங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, நன்மக்கள் பேறு வேண்டி, நேற்று, சந்தான கோபால கிருஷ்ண யாகம் நடத்தப்பட்டது.