கோவை கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2017 12:09
கோவை: புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதம். அதனால் புரட்டாசியில் வரும் ஐந்து சனிக்கிழமைகளிலும், பெருமாள் கோவில்களில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாசபெருமாள், சித்தாபுதுார் ஜெகன்நாதபெருமாள், உக்கடம் லட்சுமிநரசிம்மர், பெரியகடைவீதி லட்சுமிநாராயண வேணுகோபால சுவாமி, சலிவன்வீதி வேணுகோபாலசுவாமி, கோட்டைமேட்டிலுள்ள கரிவரதராஜ பெருமாள். பேரூர் பச்சாபாளையத்திலுள்ள தசாவதாரபெருமாள், கோவைப்புதூரிலுள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பக்தர்கள் வருகைக்காக கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.