பழநி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பழநி தலைமை தபால்நிலையத்தில் கங்கை தீர்த்தம் விற்பனை செய்யப்படுகிறது. பழநி புதுதாராபுரம் ரோட்டிலுள்ள தலைமை தபால் நிலையத்தில் ரிஷிகேஸ், கங்கோத்ரியில் இருந்து வரவழைக்கப்பட்ட புனித கங்கை தீர்த்தம் 200மி.மி., ரூ.15க்கும் 500மி.மி., ரூ.22க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வீடு, வர்த்தக நிறுவனங்களில் பூஜையில் பயன்படுத்த கங்கை தீர்த்தத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிசெல்கின்றனர். இதுகுறித்து பழநி போஸ்ட் மாஸ்டர் பால்ராஜ், விற்பனை மேலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கூறுகையில்,“ கங்கை தீர்த்தம் 3 ஆண்டுகளாக விற்பனை செய்கிறோம். தீபாவளியை முன்னிட்டு வெளியே ஸ்டால் அமைத்துவிற்கிறோம். மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கிக்கொள்ளலாம். இதுபோக பாஸ்புக், அஞ்சல் அட்டைகளில் குறைந்தக் கட்டணத்தில் உங்களது நிறுவனங்களை விளம்பரம் செய்து பயன்பெறலாம். தனியார் நிறுவனங்களுக்கு இணையான விரைவான பார்சல் சர்வீஸ் செய்துதருகிறோம்,”என்றார்.