பெருந்துறை: வீரமாத்தியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. பெருந்துறை, புது பஸ் ஸ்டாண்ட் அருகே, கோட்டைமேடு பகுதியில் விநாயகர் மற்றும் வீரமாத்தியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று காலை நடந்தது. கார்த்திகேய சிவாச்சாரியார் தலைமையில், கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடந்தது. நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.