பதிவு செய்த நாள்
18
செப்
2017
01:09
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நடந்து வரும் காவிரி மஹா புஷ்கரம் விழாவில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா நேற்று புனித நீராடினார். நாகை மாவட்டம், மயிலாடுதுறையில், 144 ஆண்டுகளுக்கு பின், காவிரி துலா கட்டத்தில், மஹா புஷ்கரம் விழா, 12ம் தேதி துவங்கி, 24ம் தேதி வரை நடக்கிறது. தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா, நேற்று அதிகாலை, 5:00 மணியளவில் மயிலாடுதுறை துலா கட்டத்திற்கு வந்து, காவிரியில் புனித நீராடி, வடகரையில் நடந்த யாகத்தில் பங்கேற்று, வழிபட்டார். பின், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோவிலில், சுவாமி தரிசனம் செய்தார். வரும், 20ம் தேதி மகாளய அமாவாசை தினத்தன்று, முதல்வர் பழனிசாமி புனித நீராட வருகிறார்.