ஒருவரை வாழ்த்துவோர், நூறாண்டு வாழ்க, என வாழ்த்துவார்கள். ஆனால், அவர் அதுவரை இருப்பார் என சொல்ல முடியாது. ஏனெனில் பிறக்கும் போதே மரணம் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. ஆனால், மனிதன் உலகம் உள்ளளவும், வாழப் போவதாக நினைத்துக் கொண்டு, போடும் ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. பைபிள் மரணத்தைப் பற்றி, எப்போது மரண சாசனம் உண்டாயிருக்கிறதோ, அதைச் செய்தவனுடைய மரணமும் அவசியம் உண்டாயிருக்க வேண்டும். (இறந்தவனைச் சுமப்பவனும், இறப்பான் என இதற்கு பொருள்) என்று சொல்கிறது.
* புழுதியிலிருந்து வந்தாய்; புழுதிக்கே திரும்பிப் போவாய். * நாம் எல்லோரும் இலையைப் போல் வெளிறிப் போவோம். * மரங்களின் மூலவேர் அருகே கோடரி வைக்கப்பட்டுள்ளது.
ஆகையால், நற்கனி கொடாத ஒவ்வொரு மரமும் அடியோடு வெட்டப்பட்டு அக்னியிலே போடப்படும்.
* பாவத்தின் சம்பளம் மரணம். இதில் கடைசி இரண்டு வசனங்களில், மனிதன் வாழும் போது நல்லதைச் செய்ய வேண்டும், பாவம் செய்யக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.