பதிவு செய்த நாள்
20
செப்
2017
12:09
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, மூலவர் பெருமாள், திருப்பதி திருமலை வெங்கடேச பெருமாள் அலங்காரத்தில், நெய்தீப தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, மாதம் முழுவதும், காலை 6:00 மணிக்கு, சுப்ரபாதம், 6:15 மணிக்கு, கோபூஜை, 6:30 மணிக்கு, விஸ்வரூபம், 8:00 மணிக்கு, தோமாலை சேவை, 10:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் (சனிக்கிழமை தவிர) நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு, உச்சிக்கால பூஜை, மாலை 5:00 மணிக்கு, ஊஞ்சல் சேவை, 6:00 மணிக்கு, சாயங்கால தோமாலை அஷ்டோத்ர அர்ச்சனை, இரவு 8:30 மணிக்கு, ஏகாந்த சேவை நடக்கிறது. அமாவாசையை முன்னிட்டு, உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு நேற்று அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.