நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு பாதாள காளி கோவிலில் உள்ள பிரத்தியங்கரா தேவிக்கு அமாவாசையை முன்னிட்டு நேற்று நிகும்பலா யாகம் நடந்தது. யாகத்தையொட்டி, மதியம் 12:00 மணிக்கு யாக வேள்விகள் துவங்கப்பட்டு 1:00 மணிக்கு மிளகாய் வற்றல்களை யாகத்தில் கொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. தொடர்ந்து மகா பூர்ணாகுதி நடந்து மகா தீபாராதனை நடந்தது. 1:30 மணிக்கு பாதாள காளிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து மகா தீபாராதனை நடந்தது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் யாகத்தில் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். அதேபோல் நடுவீரப்பட்டு அங்காளம்மன் கோவிலிலும் அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.