திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றில் புரட்டாசி மகாளய அமாவாசையான நேற்று ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். திருப்புவனத்தில் நேற்று காலை 5:00 மணி முதல் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுக்க குவிந்தனர். காய்கறிகள், பச்சை அரிசி உள்ளிட்டவற்றை படைத்து முன்னோர்களை வழிபட்டனர். வறண்டு கிடந்த வைகை ஆற்றில் தண்ணீர் இல்லாததால் தண்ணீர் தொட்டியில் கசிந்த சிறிதளவு தண்ணீரில் நீராடி முன்னோர்களை வழிபட்டனர்.போதிய மழை இல்லாததால் ஆற்றில் நீர்வரத்து இல்லை. அதிகாலை முதலே வெயில் கடுமையாக கொளுத்தியதால் பக்தர்கள் அவதிப்பட்டனர். பக்தர்களுக்கு அடிப்படை வசதியான குடிநீர், கழிப்பிட வசதியில்லாததால் அவதிப்பட்டனர்.