கொலு வைப்பதற்கு முன் வீட்டை சுத்தமாக்கி, கோலங்களால் அழகுபடுத்த வேண்டும். வாசலில், மாவிலைத் தோரணம் கட்டலாம். மரப்பலகையால் சிறு மண்டபம் அமைத்து அதன் நடுவில் உயரமான பலகையை சிம்மாசனமாக வைக்க வேண்டும். அதன் மீது பட்டுப்புடவை விரித்து, மண் அல்லது உலோகத்தால் ஆன அம்மன் சிலையை வைக்க வேண்டும்.சிலை இல்லாவிட்டால் அம்மன் படத்தை வைக்கலாம். வலப்புறத்தில் கலசம் வைக்க வேண்டும். கலசத்தையும் அம்மனாக பாவித்து வணங்க வேண்டும். தினமும் மாலையில் அம்மனை அலங்கரிக்கும் போது கலசத்திற்கும் மலரிட்டு வணங்க வேண்டும்.