பதிவு செய்த நாள்
20
செப்
2017
02:09
முதல்படி முதல் ஆறாம்படி வரை ஓரறிவு முதல் ஆறறிவு உயிர்களை அடுக்குதல் வேண்டும். முதல்படியில் புல், செடி, கொடி முதலிய தாவர பொம்மைகளும், இரண்டாம் படியில் சங்கு, சிப்பியாலான பொம்மைகளும், மூன்றாம் படியில் ஈ, எறும்பு முதலிய உயிர்களும், நான்காம் படியில் வண்டு, நண்டு போன்றவையும், ஐந்தாம் படியில் பறவை, மிருகம் போன்றவையும், ஆறாம் படியில் வணிகர், குறவன், பாம்பாட்டி, போலீஸ் போன்ற மனிதர் சிலைகளை அடுக்க வேண்டும். ஏழாம் படியில் முனிவர், மகான் போன்ற உயர்நிலை மனிதர்களையும், எட்டாவது படியில் இந்திரன், குபேரன் போன்ற தேவர்கள், நவக்கிரகங்களையும் வைக்க வேண்டும். ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி போன்ற தெய்வங்களையும் அடுக்க வேண்டும். பொம்மைகள் கிடைக்காவிட்டால், எல்லாப்படிகளிலும் தெய்வச்சிலைகளை அடுக்கலாம். தற்காலத்தில் படிகள் மட்டுமில்லாமல், தெப்பக்குளம், கோயில், தோட்டம், சந்தை, திருமண வைபவம், கடைத்தெரு போன்றவையும் இடம் பெறுகின்றன.