படிகளின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருக்க வேண்டும். பொதுவாக 5 அல்லது 7 என்ற எண்ணிக்கையில் வைப்பர். இந்த படிகளைப் போல மனிதனும் வாழ்வில் பல படிநிலைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது. மேல்நோக்கிச் செல்லும் படி போல, மனிதனும் வாழ்வில் உயர வேண்டும் என்பதே இதன் நோக்கம். ஓரறிவு உயிராக இருந்த நாம், பரிணாம வளர்ச்சியால் தற்போது ஆறறிவு பெற்ற மனிதராகப் பிறந்திருக்கிறோம். இதனை பயன்படுத்தி நல்வழியில் வாழ்ந்தால் அம்பிகையின் அருளால் தெய்வ நிலையை அடையலாம் என்பதையே கொலு உணர்த்துகிறது.