Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோலத்தில் தோன்றிய நவராத்திரி ... நான்கு வகை நவராத்திரி நான்கு வகை நவராத்திரி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
எழுத்தின் அளவு:
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?

பதிவு செய்த நாள்

20 செப்
2017
05:09

புரட்டாசி, ஐப்பசி மாதங்களிலும், சித்திரை மாதத்திலும் நவராத்திரி கொண்டாடப்பட வேண்டும் என, இந்து சாஸ்திரம் கூறுகிறது. இவை முறையே, சரத் ருது, வசந்த ருது என்றழைக்கப்படுகின்றன.ஏன் இப்படி என்ற கேள்விக்கு, இந்த மாதங்கள், எமனின் கோரைப் பற்கள் என்றும், மனித குலம், கடுமையான நோய்களால் பீடிக்கப்படும் காலம் என்றும் பதில் வருகிறது. சண்டிகையை வழிபட்டால், நோய்களைத் தவிர்க்கலாம். சண்டிகை என்பவள் சாதாரணமானவள் அல்ல. 18 கைகளை உடையவள்; ஆயுதம் தரிப்பவள். மகா வீரியம் கொண்டவள். எப்பேற்பட்ட துக்கங்களையும் துாக்கி எறிபவள். இவளை வழிபடுவதற்கான காலமாகவே, நவராத்திரி ஏற்படுத்தப்பட்டது. மகாளய பட்சம் முடிந்த அடுத்த தினத்திலிருந்து கொண்டாடினால், நோய் வரும் முன் விரட்டலாம்.

வட மாநிலங்களில் நவராத்திரி, துர்கா பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. கல்வியில் சிறந்து விளங்க விரும்புபவர்கள், எதிலும் வெற்றி வாகை சூட விரும்புபவர்கள், அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க விரும்புபவர்கள், சுக வாழ்வு வாழ விரும்புபவர்கள், நவராத்திரியைக் கொண்டாட வேண்டும் என, வியாசர் சொல்கிறார்.நவராத்திரி, பெண்களுக்கு மட்டுமே உரிய பண்டிகை என நம்பப்படுகிறது. ஆனால், மேலே சொன்ன பராக்கிரமங்களை பெரும்பாலும் விரும்புபவர்கள் ஆண்களே. எனவே, அவர்களுக்கு இந்த பண்டிகை மிகவும் முக்கியம்.

நவராத்திரி விரதம், பிரதமையில் துவங்கி நவமியில் முடிகிறது. இந்த நாட்களில், அம்பிகையை பூஜித்தால், அம்மை நோய் வராது என்றும், கிரக தோஷங்கள் நீங்கும் என்றும் சொல்லப்படுகிறது. எதிர்மறையான விளைவுகள் எதுவும் வாழ்க்கையில் அண்டாது. அழகு, அன்பு, ஆற்றல், அருள், அறிவு ஆகியவற்றை, பெண் வடிவமாக கருதுவது நம் மரபு. கல்லையும், பெண்ணுருவாக்கி வழிபடுவது, நம் கலாசாரம். இவை இப்படி இருக்க, பெண் என்றால் பலவீனம் என நினைத்து, சுயஅழிவை தேடிக் கொண்ட மகிஷாசுரனின் கதை தான், நவராத்திரி விழாவின் துவக்கம். அன்னை பராசக்திக்காக, ஒன்பது நாட்கள் இரவில் தொடர்ந்து செய்யப்படும் பூஜையாகும். பொதுவாக, நவராத்திரி பூஜை, ஆண்டிற்கு நான்கு முறை கொண்டாடப்பட வேண்டும் என்பது புராண வரலாறு.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழா ஒட்டி, வரும் 26ம் தேதி வரை தினமும், இரண்டு மணி ... மேலும்
 
temple news
ஹாசன்: பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில், 14 நாட்களுக்குப் பின், நேற்று நடை அடைக்கப்பட்டது. இந்தாண்டு, 25 ... மேலும்
 
temple news
கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி மங்களேஸ்வரி நகரில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar