விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள கோவில்களில் நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நவராத்திரியை யொட்டி, விழுப்புரம் அமராபதி விநாயகர், கோட்டை விநாயகர், கைலாசநாதர், வைகுண்டவாச பெருமாள், ஓம்சக்தி கோவில்களில் நேற்று காலை 7.00 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து 8.00 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. நவராத்திரி துவங்கியதையொட்டி, வரும் 29ம் தேதி வரை கோவில் மற்றும் வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடுகள் செய்யும் நிகழ்ச்சி துவங்கியது.