பதிவு செய்த நாள்
22
செப்
2017
01:09
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, கொட்டவாடி, மகா சக்தி மாரியம்மன் கோவிலில், நேற்று முதல், நவராத்திரி உற்சவம் தொடங்கியது. அதையொட்டி, இன்று முதல், இரவு, 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை நடக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருக, குழந்தை பாக்கியம் கிடைக்க, திருமணத்தடை நீங்க, நோய், நொடியின்றி சுபிட்சம் பெற, வரும், 30 மாலை, 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது.