மயிலம்: மயிலம் முருகர் கோவி லில் நவராத்திரி விழா, கொலுக் காட்சி துவங்கியது. மயிலம் வள்ளி, தெய்வானை சமேத சுப்பரமணியர் சுவாமி கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது. இதையொட்டி, தினசரி காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. முற்பகல் 11:00 மணிக்கு, கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் கொலு வைத்து, சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு 9 நாட்களுக்கு உற்சவம் நடக்கிறது. இதில் ஏரளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்துள்ளார்.