பதிவு செய்த நாள்
25
செப்
2017
01:09
கொடுமுடி: காவிரி மஹா புஷ்கர விழா நிறைவு நாளில், கொடுமுடி காவிரி ஆற்றில், ஏராளமான பக்தர்கள், நேற்று புனித நீராடினர். மஹா புஷ்கர விழா கடைசி நாளான நேற்று, அதிகாலை முதலே காவிரி ஆற்றுக்கு பக்தர்கள் படையெடுத்தனர். உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் புனித நீராட குவிந்தனர். பவானியைப் போல், கொடுமுடியில் புஷ்கர விழா, விமர்சையாக கொண்டாடப்படவில்லை. ஆனாலும், விழா தொடங்கியது முதல், நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். நேற்று கடைசி நாள் என்பதால், மக்கள் குவிந்தனர். இதனால் காவிரி ஆறு களை கட்டியது. ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள், மகுடேஷ்வரர் கோவிலில் தரிசனம் செய்தனர். கூட்டம் அதிகம் இருந்ததால், நீண்ட நேரம் காத்திருந்து தரிசித்தனர். காலை முதல், மாலை வரை, 5,000த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.