செஞ்சி: திருவண்ணாமலை சென்ற சிவனடியார்களுக்கு, செஞ்சியில் பொது மக்கள் வரவேற்பு அளித்தனர். திண்டிவனத்தை சேர்ந்த சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர், 11வது ஆண்டாக திருவண்ணாமலைக்கு பாதயாத்திரை சென்றனர். இக்குழுவை சேர்ந்த 200 க்கும் மேற்பட்டவர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர் தட்சணாமூர்த்தி தலைமையில், திண்டிவனம் திந்திரிணீஸ்ரர் கோவிலில் இருந்து பாத யாத்திரையை துவக்கினர். நேற்று முன்தினம் காலை நாட்டார்மங்கலத்தில் பொது மக்கள் சார்பில் வரவேற்பளித்தனர். பகல் 12:00 மணிக்கு செஞ்சிக்கு வந்த குழுவினரை, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சிவசுப்பிரணியன் தலைமையில் பக்தர்கள் வரவேற்றனர். பின்னர் இக்குழுவினர், யாத்திரையை தொடர்ந்தனர்.