பதிவு செய்த நாள்
26
செப்
2017
01:09
ஈரோடு: ஈரோடு, கோட்டை பெருமாள் கோவில் தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில், தேரோட்டம், அக்.,1ல் நடக்கிறது. விழா துவக்க நிகழ்ச்சி, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. காலை, 6:00., மணிக்கு, யாகசாலை பூஜை, திருமஞ்சனம், தீபாராதனை செய்து, கோவில் பட்டாச்சாரியார்கள், கோவில் கொடிமரத்தில் கொடியேற்றினர். இரவு, 7:00 மணிக்கு அன்னபட்சி வாகனத்தில், வீதியுலா நடந்தது. இன்று, காலை, யாகசாலை பூஜை, மாலை சிம்ம வாகனத்தில் உலா நடக்கிறது. விழாவில், கோவில் செயல் அலுவலர் முத்துசாமி, உதவி ஆணையர் முருகையா மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.