பதிவு செய்த நாள்
30
செப்
2017
02:09
திருப்பூர் : திருப்பூர் காந்தி நகரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில், 8ம் ஆண்டு துவக்க விழா, நாளை நடக்கிறது. நாளை, (1ம் தேதி) காலை, 5:00 மணிக்கு மஞ்சள் பிள்ளையார் வழிபாடு, 7:30 மணிக்கு, மஹா பூர்ணாகுதி, உபசார பூஜைகள் நடைபெறுகிறது. அதன்பின், காலை, 8:00 மணிக்கு, சகல திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம், 1,008 சங்கு தீர்த்த அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சிறப்பு வழிபாட்டு நிகழ் வில், அனைத்து பக்தர்களும் பங்கேற்று, சாய் பாபா தரிசனம் பெறலாம்.