திண்டிவனம் : ஓமந்துார் ஸ்ரீராம் பள்ளியில், காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். விழுப்புரத்தில் உள்ள சங்கரமடத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில், திண்டிவனம் அருகே உள்ள ஓமந்துாரிலுள்ள ஸ்ரீராம் பள்ளிக்கு நேற்று மாலை, காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சுவாமி வருகை தந்திருந்தார். விஜயேந்திரருக்கு, ஸ்ரீராம் பள்ளியின் தாளாளர் முரளிரகுராமன் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்ற விஜயயேந்திரர், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். நிகழ்ச்சியில், விழுப்புரம் மகாலட்சுமி ரமேஷ், திண்டிவனம் பிராமணர் சங்க தலைவர் குமார், மூத்த வழக்கறிஞர் சங்கரன், விழுப்புரம் முன்னாள் அரசு வழக்கறிஞர் நாகராஜன், பள்ளியின் முதல்வர் ராமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.