ஷெர்லாக் ஹோம் என்பவர், ஆங்கில நாவல்களில் வரும் ஒரு துப்பறியும் கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தைக்கதாநாயகனாகக் கொண்டு நாவல்களை எழுதியவர் சர். ஆர்தர்கேனன் டாயில். டாயிலுக்கு 12 நண்பர்கள் இருந்தனர். ஒருமுறை, அவர் வேடிக்கையாக அவர்களுக்கு ஒரு மொட்டை தந்தி அனுப்பினார். அதில், “உங்கள் ரகசியங்கள் அம்பலமாகப் போகிறது. தப்பி விடுங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார். தந்தி கிடைத்ததும் நண்பர்கள் நாட்டை விட்டு ஓடினர். ஏனெனில், நண்பர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள். அவர்களை திருத்த டாயிலுக்கு வேறு வழி தெரியவில்லை. “உங்கள் பாவம் உங்களை தொடர்ந்து வந்து பிடிக்கும்” என்கிறது பைபிள். பாவச்செயல்களில் இருந்து அவர்களை மீட்கவே டாயில் இந்த நடவடிக்கையை எடுத்தார்.பாவம் செய்தவர்கள், இயேசுவிடம் மன்னிப்பு தேட வேண்டும். மீண்டும் அவற்றைச் செய்தால் அந்த பாவத்தாலேயே அழிய நேரிடும்.