வாழ்க்கை என்பது சற்றுநேரம் தோன்றி பிறகு மறைந்து போகும் புகை. மனிதனின் வாழ்நாட்கள் பற்களுக்கு ஒப்பானவை. வயலிலுள்ள பூவைப்போல அவன் செழிக்கிறான். காற்று அதன் மீது வீசியதும் பூ உதிர்ந்து விடுகிறது. இருந்த இடத்தை இனி அது அறியாது.மனிதனின் நாட்கள் நெசவாளியின் எறிநாடாக் கருவியை விட வேகமானவை. எனவே வாழும் காலத்தை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும். நிம்மதியாக வாழ நினைப்பவர்கள், பிறரிடம் கொண்ட மனக்கசப்பு, கோபதாபம், பொறாமை, கூக்குரல், ஏச்சுபேச்சு ஆகிய குணங்களை விட்டொழிக்க வேண்டும். கருணையோடும், வாஞ்சையுள்ளத்தோடும் பொறுத்து மன்னித்து நடக்க வேண்டும்.