கொடுமுடி: கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில், பிரதோஷ விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரசித்தி பெற்ற பரிகார ஸ்தலங்களுள் ஒன்றான கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமாளுக்கு, நேற்று மஞ்சள், தேன், இளநீர், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைதொடர்ந்து தீபாராதனை நடைபெற்று, ரிஷப வாகனத்தில், சிவபெருமான், சிவகாமி அம்பாள் காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.