பதிவு செய்த நாள்
04
அக்
2017
12:10
ப.வேலூர்: ப.வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பாண்டமங்கலம், புதிய காசி விஸ்வநாதர், வடகரையாத்தூர் லிங்கேஸ்வரர், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், மாவு ரெட்டி பீமேஸ்வரர் ஆகிய கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, நந்திக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு, 7.00 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சிவபெருமானுக்கும், நந்திக்கும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.