கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் தாலுகா, லாலாப்பேட்டை விட்டுகட்டியில், மஹா கணபதி கோவில் உள்ளது. இங்கு சங்கடஹர சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், அரிசி மாவு இளநீர், விபூதி போன்ற பொருட்கள் கொண்டு அபி?ஷகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
*சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவில் பின்புறம் உள்ள, யோக வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மண்டல பூஜை நடக்கிறது. சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. *கரூர் திருச்சி சாலையில், கிருஷ்ணராயபுரம் அருகில் பாலதண்டாயுதபாணி முருகன் கோவில் உள்ளது. கிருத்திகை விழாவை முன்னிட்டு, முருகனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, பூஜை நடந்தது.