பதிவு செய்த நாள்
07
டிச
2011
12:12
கரூர்: கரூர் ஸ்ரீ அன்ன காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி வழிப்பட்டனர்.கும்பாபிஷேக விழாவை த்தை கோவில் முன்பு ஒன்பது யாகசாலை அமைக்கப்பட்டது. அதில் கங்கை, காவிரி, அமராவதி ஆகிய புண்ணிய நதியில் இருந்து கொண்டு வரப்பட்ட நீரை கொண்டு யாகசாலையில் வைத்து மந்திரங்கள் முழங்க யாகம் செய்தனர். தொடர்ந்து யாக சாலையில் குடத்தில் வைக்கப்பட்டு பூஜை செய்த புனித நீர், மேள தாளத்துடன் மூலஸ்தானத்துக்கும், ராஜகோபுரத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டது.அதன்பின்பு கரூர் கல்யாண பசுபதி பண்டிதர் மூலஸ்தானத்தில் உள்ள கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்து எட்டு திசையும் விண்ணை நோக்கி வணங்கி அன்ன காமாட்சியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்து வைத்தார். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. புனித நீர் தெளிக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட நீதிபதி ராம மூர்த்தி, கரூர் நகராட்சி தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் காளியப்பன், தீபம் கலர் லேப் சங்கர் ஓ.பி.டி., துரைராஜ், செல்வன் டெக்ஸ் ராமசாமி, கலையரங்கம் பழனியப்பன், சுப்ரமணியன், அருணா பொன்னுசாமி, ஆடிட்டர் ஹரிதிருமலையப்பன், டாக்டர் ரமேஷ், நாச்சி முத்து முதலியார், ஆர்த்தி ஹோட்டல் ராதா, இனாம் கரூர் நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் அன்னமார் தங்கவேல், கவுன்சிலர் ஸ்டீபன் பாபு, செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர். உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை காமாட்சியம்மன் கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள் குட்வில் ராஜீ, பாலாஜி சண்முகம், மனோகரன், காமராஜ், ஆடிட்டர் விஸ்வநாதன், ஏடி டெக்ஸ் தேவராஜன், செந்தில் குமார், லட்சுமி பெயிண்ட்ஸ் முருகையன், பகவான், பரமேஸ்வரன், துரை வரதன், லோகநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.