பதிவு செய்த நாள்
14
அக்
2017
11:10
காஞ்சிபுரம்: காஞ்சி சிவனடியார் திருக்கூட்டத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் அமரேஸ்வரர் கோவிலில் சொற்பொழிவு நடந்தது. காஞ்சிபுரத்தில் சிவனடியார் திருக்கூட்டம் என்ற ஆன்மிக அமைப்பு உள்ளது. இவ்வமைப்பு சார்பில், கோவில்களில் சொற்பொழிவு, சிறப்பு வழிபாடு, உழவாரப்பணி, பள்ளி மாணவ - மாணவியருக்கான நீதிநுால் மற்றும் திருவாசக போட்டி மற்றும் சமய நுால்கள் வெளியிடப்படுகின்றன. இத்திருக்கூட்டத்தின், 46வது ஆண்டு நிறைவு விழா, அக்., 4ல், துவங்கி, 15ம் தேதி வரை, காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில் நடக்கிறது. இதில், ஒன்பதாம் நாளன்று, அமரேஸ்வரர் கோவிலில், காப்பியக் கருத்தரங்கம் நடந்தது. இதில், திருமுறை விண்ணப்பம், வில்லிபாரதத்தில் சிவ வழிபாடு சொற்பொழிவு நடந்தது.