பொள்ளாச்சி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2017 11:10
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சி தாடகை மலை அடிவாரம் ஆத்மநாதவனத்தில் அமைந்தள்ள சமுக்தியாம்பிகை அம்பாள், காலசம்ஹார பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. விழாவையொட்டி, காலை, 11:00 மணிக்கும், மாலை, 6:30 மணிக்கும் காலசம்ஹார பைரவருக்கு, 16 வகையான சிறப்பு அபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.