திருப்பதி: திருமலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.திருப்பதி, திருமலையில், சமீபகாலமாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று காலை திருமலை முதல் மலைப் பாதையில் உள்ள அக்காமார் கோயில் அருகில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. அதில் மரங்கள் பெயர்ந்து மலைப் பாதையில் விழுந்தன.அப்போது, அந்த பகுதியில் வாகனங்களும், பாதயாத்திரை வழியாக செல்லும் பக்தர்களும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.இதை அறிந்த தேவஸ்தான ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு பாதையில் இருந்த மரங்கள் மற்றும் பாறைகளை அகற்றி சரி செய்தனர். அதன்பின் வாகனங்கள் மலைபாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால் மலைப் பாதையில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.