பதிவு செய்த நாள்
14
அக்
2017
12:10
திருநெல்வேலி: குற்றாலநாதர் கோயிலில் ஐப்பசிவிசு தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது. திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம், திருக்குற்றாலநாதர் கோயிலில் ஐப்பசி விசு திருவிழா கடந்த 9ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை, சப்பர பவனி நடைபெற்றது. நேற்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது. விநாயகர், முருகன், குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்பாள் ஆகியோர் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். மேளதாளம் முழுங்க விநாயகர் தேர் முதலில் இழுக்கப்பட்டது. பின்னர் முருகன், சுவாமி, அம்பாள் தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக சித்திரசபையை வலம் வந்தன. தேர்கள் நிலையம் சேர்ந்ததும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. நாளை 15 ம் தேதி காலை 9.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் நடராஜமூர்த்திக்கு வெள்ளைசாத்தி தாண்டவ தீபாராதனையும், 16 ம் தேதி காலை 10.30 மணிக்கு சித்திரைசபையில் நடராஜமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாரதனையும், 18 ம் தேதி காலை 9 மணிக்கு மேல் ஐப்பசிவிசு தீர்த்தவாரி மற்றும் 12 மணிக்கு திருவிலஞ்சி குமாரர் பிரியா விடை கொடுக்கும் வைபவமும் நடைபெறுகிறது.