Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மண்ணை மலையாக்கி வழிபடும் ... உள்ளூர் ஐயப்பன் கோயில்களில் மாலையை கழற்றும் பக்தர்கள்! உள்ளூர் ஐயப்பன் கோயில்களில் மாலையை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரோகரா கோஷத்தில் விண்ணதிர திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 டிச
2011
11:12

திருவண்ணாமலை: பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

அக்னி தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்து அருள் பாலித்தனர். கடந்த 5ம் தேதி, பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேரில் எழுந்தருளிய தேரோட்டம் நடந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 2மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விநாயகர், முருகர் சமேத வள்ளி தெய்வானை, அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் அதிகாலை காலை 4மணி அளவில் அண்ணாமலையார் மூல கருவறையில் கற்பூர தீபமேற்றி, சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் ஓத, வேதமந்திரங்கள் முழங்க அந்த கற்பூர தீபத்திலிருந்து ஒரு மடக்கில் நெய்த்திரியிட்ட விளக்கு ஏற்றப்பட்டு பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் ஐந்து மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் ஸ்ரீராஜா குருக்கள் பரணி தீபத்தை கையிலேந்தி கோயில் முதல் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு இந்த பரணி தீபத்தை கொண்டு, சிவ- சக்தி மூர்த்தங்களிலிருந்து விரிவானதே எல்லா மூர்த்திகளும் என்பதனை காட்டுவதற்காக, அம்மன் கோயில் கருவறையில் ஐந்து அகல் விளக்குகள் ஏற்றப்பபட்டன. பின்னர் கோயிலில் உள்ள விநாயகர் சந்நதி உள்ளிட்ட அனைத்து சந்நதிகளிலும் தீபங்கள் ஏற்றப்பட்டது. பரணி தீபம் ஏற்றப்படுவதை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செங்கோட்டையன், கோகுல இந்திரா, செல்லூர் ராஜூ, பரஞ்சோதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மாலை 6 மணிக்கு அனேகன் ஏகன் என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் மஹாதீபம் ஏற்றப்பட்டது. இதனை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வாணை சமேத முருகர், அண்ணாமலையார் சமேத உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தங்க கொடி மரத்தின் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தபின் தீப தரிசன மண்டபத்தில் ஒன்றாக அமர்ந்தனர். அப்போது சரியாக 5.59 மணி அளவில் அர்த்தநாரிஸ்வரர் தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளி நடனமாடி காட்சியளித்தார். அப்போது காலையில் சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்ட ஐந்து அகல் விளக்குகளையும் உடன் கொண்டு வந்து கொடி மரத்தின் முன்பாக உள்ள அகண்டத்தில் ஒன்று சேர்த்தனர்.பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் விதத்தில் 5 தீப்பந்தகள் ஏற்றப்பட்டு அவைகளை கொண்டு 2ஆயிரத்து 668 அடி மலை உயரத்தில் உள்ளவர்களுக்கு தெரியும் படி காண்பிக்கப்பட்டது. அப்போது மஹா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதைக் கண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை முட்டும் வண்ணம் இருந்தது. கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், கோயில் முதல் பிரகாரம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணியில் ஐ.ஜி., சைலேந்திரபாபு தலைமையில் 4 டி.ஐ.ஜிக்கள், 16 எஸ்.பி.,க்கள் உள்ளிட்ட 10ஆயிரம் போலீஸார், 5ஆயிரம் தன்னார்வ தொண்டு அமைப்பினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நம் மன இருட்டை நீக்கி, தெளிவு என்கிற வெளிச்சத்தை வாழ்வில் ஏற்றும் ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியை இன்று ... மேலும்
 
temple news
திருமலை: திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று இரவில், ஸ்ரீ மலையப்ப ... மேலும்
 
temple news
பழநி: பராபவ ஆண்டு ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.பழநி முருகன் கோயிலில் பராபவ ஆண்டு ... மேலும்
 
temple news
வழக்கமாக புரட்டாசியில் வரும் சரஸ்வதி பூஜை இந்த ஆண்டு ஐப்பசியில் வருகிறது. வீணையோடு காட்சி தருபவள் ... மேலும்
 
temple news
சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்களை  முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar