பதிவு செய்த நாள்
23
அக்
2017
12:10
ஆர்.கே.பேட்டை : தீபாவளி நோன்புக்கு அடுத்த ஐந்தாம் நாள், நாக சதுர்த்தியாக கொண்டாடுவது பொதுமக்களின் வழக்கம். அதன்படி, இன்று, நாகாலம்மன் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடக்கிறது. தீபாவளிக்கு அடுத்த, அமாவாசை திதியில், கேதார் நோன்பு படைக்கப்படுகிறது. இதையொட்டி, வியாழக்கிழமை சிவன் கோவில்களில், நோன்பு படையல் படைக்கப்பட்டது. இன்று, நாக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.ஆர்.கே.பேட்டை, விசாலீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள நாகாலம்மன் கோவில், அத்திமாஞ்சேரி பேட்டை நாகாலம்மன் கோவில், பொதட்டூர்பேட்டை, பொன்னியம்மன் கோவில் எதிரே உள்ள நாகாலம்மன் கோவில்களில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் நேற்று துவங்கின.இன்று காலை முதல், சிறப்பு வழிபாடு நடக்கிறது. முளைவிட்ட கம்பு, எள் உள்ளிட்டவற்றுடன் முட்டை யும், பாலும், நாகாலம்மனுக்கு படைக்கப்படுகிறது.