ஆண்டாள் கோயிலில் அமைச்சர்கள்: தலைமை செயலக அதிகாரிகளும் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2017 12:10
ஸ்ரீவில்லிபுத்துார்;சிவகாசியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலக அதிகாரிகள் பலரும் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சிவகாசிக்கு சென்றனர்.சிவகாசியில் நேற்று எம்.ஜி.ஆர்.நுாற்றாண்டு விழா நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், தலைமை செயலக அதிகாரிகள் உட்பட பலரும் பங்கேற்றனர். இதற்காக வந்திருந்த அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், கருப்பணன் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவு இயக்குனர் கணேஷ்கண்ணா மற்றும் பல்வேறு தலைமைசெயலக அதிகாரிகள் நேற்று காலை தனித்தனியாக ஆண்டாள் கோயிலுக்கு வருகை தந்தனர். ஆண்டாள் அவதார சன்னதி, வடபத்ரசயனர் சன்னதி, ராஜகோபுரம், ஆண்டாள் கோயில், தங்கவிமானத்தை தரிசனம் செய்தனர். இதனால் காலை 8:00 மணி முதல் மதியம் 12 :00மணிவரை கோயில் வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.
தினமும் அனுமதி: அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கூறுகையில், ஆண்டாள் கோயிலில் பக்தர்களுக்கு செய்து தரவேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து, துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. விரைவில் நிதி ஒதுக்கி அப்பணிகள் செய்து தரப்படும். சதுரகிரி கோயிலுக்கு அனைத்து நாட்களிலும் பக்தர்கள் செல்லஅனுமதி அளிப்பது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஆலோசிக்கபடும், என்றார்.