பதிவு செய்த நாள்
25
அக்
2017
01:10
சென்னை: சென்னை, பெசன்ட் நகர், கலாசேத்ரா காலனியில் உள்ள, ஆறுபடை வீடு முருகன் திருக்கோவிலில், இன்று மாலை, 4:30 மணிக்கு, சூரசம்ஹார விழா, வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.இக்கோவிலில், கந்த சஷ்டி விழா, 20ம் தேதி துவங்கியது. தினமும் காலை, சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், லட்சார்ச்சனை; இரவு, சுவாமி திருக்கோவில் உலா நடந்தது. இன்று காலை, 7:30 மணிக்கு, விசேஷ அபிஷேகம், அலங்காரம்; காலை, 9:00 மணிக்கு, வேல் மாறல் பாராயணம் நடைபெறும். மாலை, 4:30 மணிக்கு, சூரசம்ஹார விழா, வெகு விமரிசையாக நடைபெறும். இரவு, 7:30 மணிக்கு, வெள்ளி மயில் வாகனத்தில், முருகன் வீதியுலா நடைபெறும். நாளை மாலை, 6:00 மணிக்கு, தேவசேனை திருக்கல்யாணம், வெகு விமரிசையாக நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.