பதிவு செய்த நாள்
09
டிச
2011
12:12
கோவில்பட்டி : கோவில்பட்டியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கட்டுமான அக்னி சுத்திபூஜை நடந்தது. கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்நிலையில் தற்போது புதிதாக சங்கத்தின் சார்பில் அருணாசலம் பேட்டை தெருவில் புதிதாக மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கான அக்னி சுத்திபூஜை நடந்தது. நிகழ்ச்சியில் விநாயகர் பூஜை, ருத்ர ஹோமம் ஆகியவை தூத்துக்குடி செல்வம் பட்டர் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் நாடார் உறவின் முறை சங்க தலைவர் பழனிச்செல்வம், துணைத்தலைவர் நாகரத்தினம், செயலாளர் ராஜகுரு, பொருளாளர் சுரேஷ்குமார், பத்திரகாளியம்மன் கோயில் தர்மகர்த்தா சிவத்தப்பாண்டியன், செயலாளர் மாணிக்கம், உறுப்பினர்கள் லோகராஜ், திருப்பதி, எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி செயலாளர் ரமேஷ், தொழிலதிபர்கள் தங்ககாளிராஜா, திலகராஜ் டெக்ஸ்டைல்ஸ் ஆறுமுகச்சாமி, ராஜூ, பரமசிவன், கூடலிங்கம் ஆறுமுகச்சாமி, செல்வராஜ், முருகன், நந்தகுமார், சரவணன் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.