புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2017 12:10
ப.வேலூர்: பாண்டமங்கலத்தில், முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. கந்தசஷ்டியை முன்னிட்டு, ப.வேலூர் அடுத்த, பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில், நேற்று மாலை, வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க, முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வழக்கமாக நடக்கும் திருமணங்களை போல, தெய்வ திருமணத்திற்கு வந்திருந்த பக்தர்கள் மொய் வழங்கி அன்னதானம் பெற்றுச் சென்றனர். இதில், ப.வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சோமசேகர், ராம்குமார் சிவாச்சாரியார், சீனிவாசன் குருக்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.