பதிவு செய்த நாள்
27
அக்
2017
01:10
சென்னை: இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., - பஞ்சதுவாரகா யாத்திரைக்கு, நவ., 15ல், தனி ரயிலை இயக்க உள்ளது. மதுரையில் இருந்து, நவ., 15ல் புறப்படும் ரயில், திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாக செல்லும். இதில், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள, துவாரகா கோவில்களுக்கு சென்று வரலாம். 10 நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 9,450 ரூபாய் கட்டணம். மேலும் தகவல்களுக்கு, சென்னை, சென்ட்ரல் ரயில் நிலைய அலுவலகத்திற்கு, 90031 40681 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.