பதிவு செய்த நாள்
28
அக்
2017
01:10
கோபி: கோபி தாலுகா, வெள்ளாங்கோவில் பல்லி மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 17ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. வரும், 31ல் மதியம், 3:00 மணிக்கு தீர்த்தக்குடம் எடுத்தல், இரவு, 9:00 மணிக்கு திருவீதி உலா நடக்கிறது. நவ.,1 அதிகாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு பூஜை, காலை, 5:00 மணிக்கு பொங்கல் வைபவம் நடக்கிறது. நவ.,2ல் இரவு, 8:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு, 3ல் மதியம், 1:00 மணிக்கு மறுபூஜை நடக்கிறது. இதில், 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் துரைசாமி, செங்கோட்டையன் மற்றும் குழுவினர் செய்கின்றனர்.