நஞ்சை ஊத்துக்குளி மாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2017 01:10
மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி பஞ்சாயத்தில், மாரியம்மன் சுவாமிக்காக புதுப்பிக்கப்பட்ட தேர், நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது. கோவிலில் ஆண்டுதோறும், கார்த்திகை மாதத்தில் தேர்திருவிழா நடக்கிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல லட்சம் ரூபாய் செலவில், தேர் புதுப்பிக்கும் பணி நடந்தது. முன்பு மரத்தாலான சக்கரங்கள் இருந்தன. அவை கழற்றப்பட்டு, தற்போது இரும்பு வடிவில் உருளையாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர் வெள்ளோட்டம் நடந்தது. புதுப்பிக்கப்பட்ட தேர், ஊரை சுற்றி வெள்ளோட்டம் வந்ததை, அப்பகுதி மக்கள் கண்டு களித்தனர்.