சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த, பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில், மாதந்தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுகிறது. அதிகாரிகள் மற்றும் கோவில் பரம்பரை அறங்காவலர் முன்னிலையில், 20 உண்டியல்கள் நேற்று முன்தினம் திறந்து எண்ணப்பட்டன. ராஜன்நகர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள், கோவில் பணியாளர்கள், சத்தியமங்கலம் காமதேனு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம், 40 லட்சத்து, 24 ஆயிரத்து 354 ரூபாய், 230 கிராம் தங்கம், 305 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.