பதிவு செய்த நாள்
30
அக்
2017
11:10
சென்னை : சென்னைக்கு வந்துள்ள, ஹரிஹரபுரம், ஸ்ரீ மடத்தின் பீடாதிபதியான, சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள், அம்பாளுக்கு பாதபூஜை நடத்தினார்.
கர்நாடக மாநிலம், சிக்மகளூரு மாவட்டம், கொப்பா தாலுக்கா, ஹரிஹரபுரத்தில் , ஸ்ரீ மடம் எனும், சாரதா லட்சுமி நரசிம்ம பீடம் அமைந்து உள்ளது. இதன் பீடாதிபதியான சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள், சென்னைக்கு விஜயம் செய்துள்ளார்.அடையாறு, காந்திநகர், யோகாலயாவில் தங்கிஉள்ள சுவாமிகள், நேற்று அனந்தபத்மநாப சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு, அம்பாளுக்கு பாதபூஜை நடத்தினார். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கினார்.நேற்று மாலை, ஸ்ரீ சக்ர நவாவர்ண பூஜை நடத்தினார். நவ., 2ல், அக்கோவிலில் உள்ள அரசமர சிவபெருமான், பரிவார மூர்த்திகளுக்கு, ஜீர்ணோதாரண அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடத்தி வைக்கிறார்.நவ., 4 வரை, சென்னையில் தங்கியுள்ள சுவாமிகள், தினமும், அம்பாளுக்கு பாத பூஜை, மாலை, ஸ்ரீ சக்ர நவாவர்ண பூஜை நடத்துகிறார். ஹரிஹரபுரம், ஸ்ரீ மடத்தில், அகஸ்தியர் காலத்தில் வழிபட்ட லட்சுமி நரசிம்மர் கோவில், பீடாதிபதியால், ஆகமவிதிகள் மாறாமல், புனரமைக்கப்பட் வருகிறது. வரும், வைகாசி மாதத்தில், மகா கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இந்த வைபவத்தில், பக்தர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என, மடத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.