பதிவு செய்த நாள்
31
அக்
2017
12:10
அனுப்பர்பாளையம் : திருப்பூரை அடுத்த வாவிபாளையத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சியம்மன், கருப்பண சுவாமி கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடைபெற்றது. இதையொட்டி, காலை, 7:20 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, காப்பு அணிவித்தல், இரண்டாம்கால வேள்வி பூஜை, நாடி வழியாக மூலத்திருமேனியை அடைதல் உள்ளிட்டவை நடந்தன.காலை, 10:10 மணிக்கு, ஓதுவார் ஞானசம்பந்தன் தலைமையில், பேரூர் சென்னியப்பனார், விஜயமங்கலம் சொக்கலிங்கனார், ஞானபாரதி அனந்த கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், கோவில்விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காமாட்சியம்மன் மற்றும் கருப்பண்ணசாமிக்கு கும்பாபி ஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.