பதிவு செய்த நாள்
02
நவ
2017
01:11
அவிநாசி : அவிநாசி, வ.உ.சி., நகரில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 30ல், விநாயகர் பூஜையுடன் துவங்கியது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து கோமாதா, குதிரை ஊர்வலத்துடன் தீர்த்தக்குடங்களும், முளைப்பாரிகை களும், ஊர்வலமாக கோவி லுக்கு கொண்டு செல்லப்பட்டன. அதன்பின், விமான கலசம் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. யாகசாலை பூஜைகளுக்கு பின், நேற்று காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜையை தொடர்ந்து, தீர்த்தக்குடம் புறப்பட்டது. காலை, 9:45 மணிக்கு கோவில் கோபுரங்களுக்கு தீர்த்தம் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, தச தரிசனம், அம்மனுக்கு சிறப்பு அபிஷே கம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தன. கும்பாபிஷேகத்தை முன் னிட்டு, நேற்று கருமத்தம்பட்டி ‘சங்கமம்’ கனகராஜ் கலைக்குழுவினரின் ஒயிலாட்டம், சிறுமுகை தண்டபாணி குழு வினர் பஜனை, சிவகுமார், ராஜா குழுவினர் நாதஸ்வரம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று முதல், 12 நாட்களுக்கு, தினமும், காலை, 10:00 மணிக்கு மண்டலாபிஷேக பூஜை நடக்கிறது.