பதிவு செய்த நாள்
02
நவ
2017
01:11
கோவை : கணபதி சங்கனுார் பிரதான சாலையிலுள்ள, லெனின் நகரில் இருக்கும் ஆதி விநாயகர் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த அக்., 30ம் தேதி பக்தர்கள் புடைசூழ முளைப்பாரி ஊர்வலத்தோடு, வாஸ்துபூஜைகள் துவங்கியது. அக்., 31 அன்று, தேர்வுசெய்யப்பட்ட, 170 சுமங்கலிகள் பங்கேற்ற, சிறப்பு பூஜை மாலை 5:30 மணிக்கு நடந்தது. இரவு 7:30 மணிக்கு சுவாமிக்கு, அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்வு நடந்தது. நேற்று காலை, சிவாச்சாரியார்கள், புனித குடங்களிலிருந்த தீர்த்தத்தை, ஒரே நேரத்தில், விசாலாட்சி விஷ்வநாதர், ஆதிவிநாயகர், சுப்பிரமணியர், காலபைரவர், நவக்கிரஹ சன்னதிகளில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்துவைத்தனர். கூடியிருந்த பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.