திருநெல்வேலி : நெல்லை வரதராஜபெருமாள் கோயிலில் சுதர்சன ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நெல்லை வரதராஜ பெருமாள் கோயிலில் தென்புறமுள்ள சக்கரத்தாழ்வார் சன்னதியில் கடந்த 15 ஆண்டுகளாக சுதர்சன ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று சக்கரத்தாழ்வாருக்கு சுதர்சன ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டு காலை 8 மணி முதல் 11 மணிவரை ஹோமமும், 11 மணி முதல் 12 மணிவரை சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு தங்க கவசத்தாலான அங்கி உடுத்தப்பட்டு, சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை மாதவபட்டாச்சாரியார், வெங்கடேஷ் பட்டாச்சாரியார் செய்தனர்.